பிளஸ் 2 ஃபெயில் நீட் பாஸ் !!! நீட் தேர்வில் 705/720.. + 2 ஃபெயில் +2 மறு தேர்விலும் ஃபெயில்.. குஜாரத் மாணவி

0

 



குஜராத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்திய  மாணவி தற்போது  , 12 தேர்விலும் அதன் பின் மறுதேர்விலும் தோல்வி.


மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வை மே 5ஆம் தேதி தேசிய தேர்வுக் கவுன்சில் நாடு முழுவதும் நடத்தியது. தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த மாணவி  720க்கு 705 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.


ஆனால், கடந்த மார்ச் மாதம் அவர்எழுதிய  பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் அறிவியல் பாடங்களில் தோல்வியடைந்தார். இதற்காக சப்ளிமென்டரி தேர்வு எனப்படும் மறுதேர்வை எழுதி பின் அதிலும்  தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.


இந்த மறுதேர்வில் இயற்பியல் போன்ற அறிவியல் பாடங்களில் 22 மதிப்பெண்களும், வேதியியலில் 33 மதிப்பெண்களும் மட்டுமே பெற்றுள்ளார். ஆனால் நீட் தேர்வில் வேதியியலில் 99.86%, இயற்பியலில் 99.89%, உயிரியலில் 99.14 மதிப்பெண்கள் பெற்று மொத்தமாக 705/720 மதிப்பெண்கள் எடுத்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு தொடங்கும் போதே வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top