வெளுத்து வாங்கப்போகும் கனமழை - அலெர்ட் கொடுத்த வெதர் மேன்..

0

 



மழை: சென்னையில் அடுத்த 10 நாட்களுக்கு பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.


குறிப்பாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேற்கு நோக்கி வீசும் காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றும் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.




இந்நிலையில், அதிதீவிர புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருவதால், வடசென்னையை தவிர, மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நிலை அடுத்த 10 நாட்களுக்கு தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மதுரவை, போரூர், வானகரம், ஐயப்பன்தாங்கல், ராமாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று மாலை நல்ல மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. காலை வேளைகளில் சுட்டெரிக்கும் என்றும், மாலை நேரங்களில் சென்னையில் பலத்த மழை பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top