சனாதனிகளே! சமூகநீதிக்காரர்களே!!

0

சனாதனிகளே…! சமூகநீதிக்காரர்களே…!!

 Stream THAMIZH THAAI VAAZHTHU by S Partha Sarathy | Listen online for free on SoundCloud

 

                                                     அன்புத் தமிழ்ச் சொந்தங்களே எந்த சமூக நீதிக் கட்சியானாலும் சரி,,, எந்த சனாதனக் கட்சியானாலும் சரி,,,, அரசியல் கட்சிகள் இனி வருங்காலங்களிலாவது தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். பொது மக்களாகிய எங்களை உங்களுடைய கொள்கைகளுக்கு ஏற்றார் போல் இனியும் வளைக்கக்கூடாது இனியும் திணிக்கக் கூடாது இனியும் நசுக்கவும் கூடாது.

மரபான பெருங்குடியுமான ஆதிநீதித் தமிழர்களாம் எங்களை உங்களுடைய அரசியல் எனும் பிழைப்புவாத குறுஞ்சட்டத்திற்குள் அதாவது உங்களுடைய அற்ப கொள்கை கோட்பாடுகளுக்குள் நீங்கள் இனியும் அடைக்கக் கூடாது இனியும் நீங்கள் குறுக்கக் கூடாது. இனியும் நீங்கள் சிதைக்கவும் கூடாது.

எங்களுடைய தமிழ் மரபிற்கு ஏற்றார்போல மட்டுமே எங்களுடைய தமிழ் உள் உணர்விற்கு ஏற்றார்போல மட்டுமே உங்களுடைய அரசியல் கொள்கைகள் வரையறுக்கப்பட வேண்டும். அது எந்த சமூக நீதிக் கட்சியானாலும் சரி,,, எந்த சனாதனக் கட்சியானாலும் சரி,,,, தென்னிந்தியா எனப்படுகின்ற தமிழ் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ,,, தமிழகமா? தமிழ் நாடா? என்பது கூட அவ்வப்போதும் விவாதமாகி வருவது வேதனைக்கு உள்ளாக்குகின்றது.

சமூக நீதிக் கட்சி என்று சொல்லிக் கொள்கின்ற அந்த கட்சியிலிருப்பவர் அந்தத் தமிழர் தன் நாட்டிலேயே அக்தாவது தன் தமிழ் நாட்டிலேயே நிம்மதியாக சாமி கும்பிடக் கூட முடியவில்லை,,, சுதந்திரமாக எந்தச் சாமிக்கும் மாலை போட்டுக் கொண்டுக் கூட விரதமிருக்க முடியவில்லை,,, குற்ற உணர்ச்சி இல்லாமல் சாமி அருளைத் வேண்டி மலை ஏறி புனிதப் பயணங்களை மேற்கொள்ள முடியவில்லை,,, ஏனென்றால் அவன் சனாதனி என்று அல்லது தான் வகுத்த சமூக நீதிக்கு எதிரானவன் என்று ,,, இந்த மண்ணுக்கு எதிரானவன் என்பது போன்று ஒரு கேடுகெட்ட கருத்துருவை உருவாக்கி அவனுடைய இயல் வாழ்விலேயே அவனுடைய தமிழ் மரபு ஆன்மீக வாழ்விலேயே அவன் தன்னுடைய மனத்தளவிலேயே தன்னளவிலேயே தாழ்ந்து போகும் படியாகவும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகும் படியாகவும் விஷத்தை விஷமமாக கலந்துள்ளனர். தொடர்ந்து இன்றும் கூட மரபான தமிழ்ச் சமூகத்திலே இத்தீங்கைச் செய்து வருகின்றனர்.

அதே வேளையிலே ஒருவன் ஒரு நூற்றாண்டுகளுக்கு உள்ளாகவே உருவாகியிருக்கின்ற இந்திய மரபு ஆன்மீகத்திற்கு எதிர்ச் சித்தாந்தமாகிய சமூக நீதி கருத்துக்களை ஆதரிக்கின்றான் என்றால்,,, ஏன் சமூக நீதி என்ற சொல்லை உச்சரிகின்றான் என்றாலும் கூட அவனை இந்திய மரபு ஆன்மீகத்திற்கு எதிரானவனாக ஒரு கொடும்பாவியாகவே சித்தரித்து அவன் மீது கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றுமளவிற்கு சனாதனிகள் ஆத்திரமடைவது என்பதும் மூர்க்கமடைவது என்பதும் கண்டிக்கத்தக்கது மற்றும் திருத்திக் கொள்ளவேண்டியதும் கூட,,, குறைந்தபட்சம் நம் தமிழ் நாட்டிலாவது,,,

கடந்த சில நூற்றாண்டுகளிலே முன்எப்போதும் இல்லாத அளவில் தமிழன் தன் இயலை தேடத் தொடங்கிவிட்டான் தன் விழுதுகளை தன் வேரை தீவிரமாக தேடத் தொடங்கிவிட்டான்,,, உதாரணத்திற்கு இஸ்லாமியர் ஒருவர் தன் மார்க்கமாக ஏதோ காரணத்தால் இஸ்லாத்தைக் பின்பற்றுகின்றார்,,, ஆனாலும் அடிப்படையில் அவர் சந்தேகத்திற்கே இடமில்லாத தமிழரே,,,

கிறித்துவர் ஒருவர் தன் மார்க்கமாக ஏதோ காரணத்தால் கிறித்துவத்தைப் பின்பற்றுகின்றார் ,,, ஆனாலும் அடிப்படையில் அவர் சந்தேகத்திற்கே இடமில்லாத தமிழரே,,,

இந்துவான ஒருவரும் தன் மார்க்கமாக ஏதோ காரணத்தால் தற்போதைய இந்து மதத்தைப் பின்பற்றுகின்றார்.அடிப்படையில் அவருமே சந்தேகத்திற்கே இடமில்லாத தமிழரே,,,

ஒரு தமிழனாகப்பட்டவன் அணிந்திருக்கின்ற சட்டையானது அல்லது ஒரு தமிழனின் மீது தன் பெற்றோராலோ ,சமூகத்தாலோ அல்லது அரசாலோ அணிவிக்கப்பட்டிருக்கின்ற சட்டையானது இஸ்லாத்தாக இருக்கலாம் கிறித்துவமாக இருக்கலாம் இந்துவாகவும் இருக்கலாம்.ஆனால் சட்டைக்கு உள்ளிருப்பவன் மறுக்கவே முடியாத ஆதித் தமிழனே,,,!அந்த சட்டைக்கு உள்ளிருக்ககூடிய அந்தத் தமிழனுடைய நெஞ்சு நடுவில் சீவனாக இருப்பது,,,உயிராக இருப்பது,,,

அல்லாஹ் எனப்படுகின்ற ஆதிநீதியாம் தமிழே,,,

பரிசுத்த ஆவி எனப்படுகின்ற ஆதிநீதியாம் தமிழே,,!

சிவம் எனப்படுகின்ற ஆதிநீதியாம் தமிழே,,,!

என்பதை இனியாவது புரிந்து கொண்டு சமூக நீதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் மற்றும் சனாதனிகளும் தமிழர்களாகிய எங்களை ஆதி நீதித் தமிழர்களாகிய எங்களை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்காமலும் இதன்பொருட்டு எங்கள் மரபையும் எங்கள் மரபினுடைய மற்றும் எங்களினுடைய சுதந்திரத்தையும் சுரண்டாமாலும் ஏய்க்காமலும் இனியாவது அரசியல் செய்து பிழைப்பு நடத்துங்கள் என இந்தப் பாமரனாகிய நான் அன்புக் கோரிக்கை இடுகின்றேன்.

தமிழ் இல்லாமல் ஆதிநீதியாம் நம்முடைய அரூபத் தமிழ் இல்லாமல் எந்த மதமும் இல்லையாம்,,எந்த ஆன்மீகமும் இல்லையாம்,,, உலகின் அத்தனை மதங்களினுடைய அத்தனை ஆன்மீகங்களினுடைய மூலமும் கருவும் கருப்பொருளும் தமிழேயாம்,,,,இதில் சந்தேகமேயில்லையாம்,,, சந்தேகமும் வேண்டாமாம்,,, தமிழே சிவமெனப்பட்டதாம் பின்னாட்களில் தமிழே அல்லாஹ் வும் எனப்பட்டதாம் பரிசுத்த ஆவியும் எனப்பட்டதாம். ஆக உலக மதங்கள் அனைத்தும் உலக ஆன்மிகம் அனைத்தும் உலகப் புனித நூல்கள் அனைத்தும் உலகப் ஞானிகள் அனைவரும் தமிழையே வெவ்வேறு நாமங்களில் வெவ்வேறு காலங்களில் வணங்கி வந்திருக்கின்றனர்,,,வணங்கிப் போற்றியும் வருகின்றனர்.

Stream THAMIZH THAAI VAAZHTHU by S Partha Sarathy | Listen online for free on SoundCloud

                                   சமூக நீதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஆன்மீக எதிர்ப்பு என்ற பெயரில் எதிர்ப்பதுவும் வெறுப்பதுவும் மறுப்பதுவும் இழிப்பதுவும் ஆதி நீதியாம் தமிழையே என்பதில் இனியுமே சந்தேகமே வேண்டாமாம்.

சமூக நீதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே! தமிழர்களினுடைய மரபான ஆன்மீகத்தை இனியுமே மதிக்காவிட்டாலும் இனியுமே ஏற்காவிட்டாலும் இனியுமே இழிவுபடுத்தினாலும் நீங்கள் சித்தாந்த ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நீர்த்துப் போவதையும் முற்றிலுமாக காலாவதியாகிக் போவதையும் எவராலும் தடுக்க முடியாது

இதைப் போலவே சனாதனிகளும் தங்களுடைய வருணாசிரமக் கொள்கையை அதாவது அந்த மனித நீதிக்கு எதிரான வருணாசிரம இழிவை முற்றாக கைவிட்டு முற்றாக மறுத்து அதை உலகிற்கு உடனடியாக பிரகடனம் செய்யாவிடில் ஆதிநீதியாம் தமிழுக்கும் ஆதிநீதியர்களாம் தமிழர்களுக்கும்நீங்கள் முற்றிலும் எதிரானவர்கள் என்பதிலும் சந்தேகமே வேண்டாமாம். தமிழ் நீதிக்கு எதிரானவர்களாம் சனாதனிகள் நீங்களுமே கூட காலப் போக்கில் ஏன் கூடிய விரைவிலேயே முற்றிலுமாக காலாவதியாகப் போவதும் நிச்சயமே,,,

ஆதி மூலமாம்,,, ஆதி சிவமாம்,,,, அரூபத்தமிழ் இல்லாத ஆன்மீகம் இந்த உலகினிலே எப்போதுமே இருந்ததில்லையாம்,,, இருக்கவும் முடியாதாம்,,, இனியுமே இருக்கப்போவதும் இல்லையாம். நமது தமிழ் நாடானது முற்றிலுமாக ஆன்மீக மறுப்பு நிலையில் ஆன்மீக எதிர்ப்பு நிலையில் இருந்த ஒரு காலக்கட்டத்தை வரலாற்றிலிருந்து எவரேனும் அடிக்கோடிட்டு காட்ட முடியுமா ? அப்படி ஒரு காலக்கட்டமும்தான் இருந்ததா என்ன?

நமது தமிழ் நாடானது இந்த மொத்த உலகத்தினுடைய ஆன்மீக ஊற்றுக் கண்ணாம் ஆண்மீக மையமுமாம் இதில் சந்தேகமே வேண்டாமாம். இப்படியான பெரும் பாரம்பரியம் கொண்ட ஆதி மரபு கொண்ட பெருமைக்குரிய தமிழர்கள் ஏதேனும் இறைவழிபாடு செய்ய அதை குற்றமென்று ஒருவன் குற்றஞ் சாட்டுவானேயானால் நான் சொல்கிறேன் அவனே குற்றவாளி,, அவனே பெருங் குற்றவாளி ,,,அவனே சமூக விரோதி,,, அவனே சனாதனி,,,, அவனே தேசத் துரோகியும் கூட,,,, இங்கு இதை நான் விழிப்புணர்வோடு பதிவு செய்கின்றேன்.

அருட்பிரகாச வள்ளலாரை சமூக நீதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் மெல்ல மெல்ல அரசியலாகவாவது இன்று அங்கீகரிக்கத் தொடங்கியிருப்பது என்பது ஒரு நல்ல அரசியலுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமே,,, பாராட்டத்

பறைச்சியாவது ஏதடா,,, பணத்தியாவது ஏதடா,,,
இறைச்சிதோல் எலும்பிலே,,, இலக்கமிட்டு இருக்குதோ,,,

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ ,,,
அங்குமிங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ,,,

                                 என்று எந்த மதத்தையும் சாராத பேரறிவை எல்லா மதங்களுக்கும் எல்லா ஆன்மீகத்திற்கும் ஒரே மூலமான ஒரே ஞானமான தமிழை போதித்த நமது சித்தர்களை நாம் எவ்வாறுதான் வரையறுக்கப் போகின்றோம். நமது தமிழ் ஞான மரபினுடைய ஆணி வேர்களான சித்தர்களை அற்ப பகுத்தறிவாளர்கள் எனச் சொல்லி தாழ்த்தத்தான் முடியுமா? என்ன,,,அல்லது வர்ணாசிரம பாகுபாட்டை ஆதரிக்கின்ற சனாதனி எனச் சொல்லி இழிவுபடுத்தவும்தான் முடியுமா ?,,,

கூடிய விரைவில் நமது தமிழ் சித்தர்கள் அனைவரையும் ஏற்றுக் கொண்டு பின்பற்றி வழிபட்டு வாழ்வாங்கு வாழ சமூக நீதி அரசியல்வாதிகள் மற்றும் சனாதன அரசியல்வாதிகள் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.

அன்புச் சொந்தங்களாகிய நீங்கள் முதலில் தமிழ் என்றால் என்ன என்றும்,,, தமிழர் என்றால் யார் என்றும்,,, தமிழ் மொழி என்றால் என்ன என்றும்,,, நம்மை ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்திட வேண்டுகின்றேன்,,,

இதோ இந்த எனது சிறு கவிதையின் வாயிலாக நான் உங்களுக்கு உதவுகிறேன்,,,,

தமிழென்பது,,,
ஒரு உயிரினுடைய,,,
ஒவ்வொரு உயிரினுடைய
ஒரு சீவனினுடைய,,,
ஒவ்வொரு சீவனினுடைய,,,
மகோன்னத துடிப்பாம்
மகோன்னத இயக்கமாம்
அந்த மகோன்னத துடிப்பினுடைய மூலமேயாம்,,,
அந்த மகோன்னத இயக்கத்தினுடைய மூலமேயாம்,,,

தமிழர் என்பவரும்
நெஞ்சு நடுவிலுள்ள
அந்த உயிரினுடைய
நெஞ்சு நடுவிலுள்ள
அந்த சீவனினுடைய
மகோன்னத துடிப்பு நிலையில்
இருப்பவனேயாம்,,,
இருந்து கொண்டிருப்பவனேயாம்,,,
அந்த மகோன்னத இயக்க நிலையிலேயே
வாழ்பவனேயாம்,,,
வாழ்ந்து கொண்டிருப்பவனேயாம்,,,

தமிழ்மொழி என்பதுவும்
அதே அந்த உயிரினுடைய
அதே அந்த சீவனினுடைய
அதே அந்த மகோன்னத துடிப்பு நிலையினுடைய
அதே அந்த மகோன்னத இயக்க நிலையினுடைய
ஒரு மகோன்னத வெளிப்பாடேயாம்,,,
ஆக தமிழ்,,, தமிழன்,,, தமிழ் மொழி,,, என்பதானது
தேச எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாம்
எல்லா தேசங்களையும் தன்னுள்ளே
கொண்டிருப்பதுவுமேயாம்,,,

ஆக
தமிழ்,,,
தமிழன்,,,
தமிழ் மொழி,,,
என்பதானது
ஆதி சக்தியாம்
ஆதி மூலமுமாம்
ஆதிநீதியாம்
தெய்வீகமாம்
அரூபத் தமிழினுடைய கூறுகளேயாம்

பகுத்தறிவு என்றால் என்ன என்று என் தமிழ் மரபிலிருந்து இந்தச் எனது சிறு கவியின் வாயிலாக புரிந்து கொள்வோம் வாருங்கள் என் அன்புத் தமிழ்ச் சொந்தங்களே,,,,

பகுத்தறிவு என்பது

ஒரு புள்ளியே,,,
ஒரே ஒரு புள்ளியே மட்டுமே,,,

மெய்ம்மை எனும்
சிவம் எனும்
ஆதிநீதி எனும்
தமிழ் எனும்
அரூபத் தமிழ் எனும்,,,
உலகமகா சிக்கலான
சிக்கல் கோலத்தினுடைய
ஒரேஒரு புள்ளியே
ஒரே ஒரு புள்ளி மட்டுமே
பகுத்தறிவு என்பதாம்,,,

ஒரே ஒரு புள்ளி மட்டுமே
உலகமகா அந்த – முழு சிக்கல்
கோலமும் ஆகிடாதாம்,,,
அதே சமயம்
அந்த ஒரே ஒரு புள்ளி இல்லாமலும்
சிறிய பெரிய எந்த ஒரு சிக்கலான
சிக்கல் கோலமும் முழுமையாகாதாம்
ஒருபோதும் நிறைவும் ஆகாதாம்,,,,

சமூக நீதி என்பது என்ன என்பது குறித்தும் உங்களை ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்திட வேண்டுகின்றேன்,,,இதோ இந்த எனது சிறு கவிதையின் வாயிலாக நான் உங்களுக்கு உதவுகின்றேன்,,,,

சமூகநீதி என்பது,,,
அனைவருக்குமான
சம நீதி என்பது,,,
ஒரு உப விளைவே,,,!
ஒரு துணை விளைவே,,,!

மெய்ம்மை எனும்
சிவம் எனும்
ஆதி நீதி எனும்
தமிழ் எனும்
அரூபத் தமிழ் எனும்
நித்திய நிலையினுடைய
அந்த மகோன்னத இருப்பினுடைய
அந்த மகோன்னத அருளினுடைய
அந்த மகோன்னத ரசவாதத்தினுடைய
அந்த மகோன்னத மகசூலினுடைய
அந்த மகோன்னத உபவிளைச்சலே
சமூக நீதி என்பதாம்,,,
அஃதாவது
அனைவருக்குமான
சம நீதி என்பதுமாம்,,,

மற்றபடி
மூலம் இல்லாத ஆதிசிவமாம்
ஆதித் தமிழ் இல்லாத
ஆதித் தமிழாம் ஆதிசிவம் இல்லாத
அற்பப் பதருகள் எல்லாம்
ஒருபோதும் சித்தாந்தமாகாதாம்
ஒருபோதும் நீடித்து நிற்காதாம்
ஒருபோதும் நிலைத்து நங்கூரமிடாதாம்,,,
காற்றின் வேகத்திற்கு ஏற்றார்போல
பறந்தோடிடுமாம்
காணாமலே போயிடுமாம்,,,,
காலாவதி ஆகிடுமாம்,,,

திராவிடம் என்பது நம்முடைய தமிழ் மரபிற்கு தமிழ் நெஞ்சிற்கு தமிழ் அரசியலுக்கு அன்னியபட்டதாக நான் கருதவில்லை திராவிடம் என்பது என்ன என்று இதோ இந்த எனது சிறு கவிதையின் வாயிலாக நான் உங்களுக்கு உதவுகிறேன்,,,,

உச்ச மானத்தோடு
உச்ச வீரத்தோடு
மகோன்னத ஞானத்தோடு
ஆதிக் குடியொன்று
தன் நெஞ்சகத்தே
இறையாம் தமிழை
சிவமாம் தமிழை
தெய்வீகமுமாம் அரூபத் தமிழை
ஆதிமூலமுமாம் அரூபத் தமிழை
யாவற்றினுடைய மூலமுமாம்
அந்த அரூபத் தமிழை
தன் உயிராகக் கொண்டிருந்து
தன் சீவனாகவும் கொண்டிருந்து
மெய்வாழ்வு வாழ்ந்து வந்த
பெரு வாழ்வு வாழ்ந்து வந்த
நிலைத்த புகழோடு – நீடித்த
நித்திய வாழ்வு வாழ்ந்து வந்த
ஆதித் தமிழர்களினுடைய
இந்த பெரும் நிலப்பரப்பானது
ஆதித் தமிழர்களினுடைய
இந்த பெருங் கண்டமானது
புனித பூமியாம்
புண்ணிய பூமியாம்
இந்தத் தமிழ் நாடானது
என் தமிழ் நாடானது
நம் தமிழ் நாடானது
திரு இடம் எனவும்
திருவிடம் எனவும்
வணங்கப்பட்டதாம்,,,
போற்றப்பட்டதாம்,,,

அப்புனிதத் திருவிடமே
பின்னாட்களில் மருவி
திராவிடமுமே ஆகிற்றாம்,,,
ஆக வணங்குகின்றேனே,,,!
என் மரபான திருவிடத்தையுமே,,,!
போற்றுகின்றேனே,,,!
என் சீவனே ஆன திராவிடத்தையுமே,,,

இறுதியாக நிறைவாக

மெய்யாகவே தமிழை உணர்ந்த மற்றும் தமிழை வணங்குகின்ற மெய்யான தமிழர்களினுடைய மெய்யான மரபான,,, மெய்யான அறமான,,, மெய்யான தமிழ் அரசியல்,,, என்பது இங்குள்ள சமூக நீதி அரசியலுக்கும் இந்தியாவெங்கும் உள்ள தற்போதைய சனாதன அரசியலுக்கும் இடைப்பட்டதாகவே இருக்கின்றது. மெய்யான தமிழ் அரசியலானது தற்போதைய சமூக நீதி அரசியல் என்று சொல்லிக் கொள்கின்ற அரசியலாலும் தற்போதைய சனாதன அரசியலாலும் தொடப்பட முடியாததாகவே இருக்கின்றது மற்றும் தொட்டுவிடவும் முடியாததாகவே இருக்கின்றது.

சனாதனிகளே…! சமூகநீதிக்காரர்களே…!!

ஆக தமிழ் மக்களும் தமிழ் இளைஞர்களும் சமூக நீதிக்காரர்களும் சனாதனிகளும் சொல்லி வருவதை நிறுவி வருவதை அப்படியே ஏற்று முட்டாள் ஆகாமல் நீங்களே நீங்களுமே ஆய்வு செய்து நமது தமிழ் மரபைத் தேடிய பெரும் பிரயாணம் மேற்கொண்டு நம் தமிழைக் கண்டடைந்து நம் தமிழ் மரபைக் கண்டடைந்து சாதி வெறி அற்றவர்களாகி மத வெறி அற்றவர்களாகி சனாதனத்தின் பெயராலோ அல்லது சமூக நீதியின் பெயராலோ பிறரை தாழ்த்தி இழிவு செய்யும்படியான பேதமற்ற மனிதர்களேயாகி அந்த பெருமைக்குரிய தமிழர்களேயாகி மீண்டுமே நமது எழுச்சித் தமிழை சூடிக் கொள்வோம் என மீண்டுமே நாம் தமிழ் எழுச்சி கொள்வோம் என சமூக நீதிக்காரனும் அல்லாத சனாதன வாதியும் அல்லாத எளிமையான மரபுத் தமிழனும் பிரம்ம்மாண்டமான ஆதிநீதித் தமிழனுமாகிய நான் என் அன்புத் தமிழ் சொந்தங்களாகிய உங்களுடைய பாதங்களில் பணிந்து வேண்டிக் கொள்கின்றேன்.

நன்றி ,,,!                                                                               

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top