லைக்கா கோவை கிங்ஸ் அணிக்கு ஏமாற்றம் அளித்த மழை – திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சில் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது!

0



திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான TNPL 2024 தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த லைக்கா கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.


தமிழ்நாடு பிரீமியர் லீக் 8வது சீசனின் இறுதி ஆட்டம் தற்போது சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைக்கா கிங்ஸ் விளையாடுகின்றன. சென்னையில் மழை பெய்ததால் டாஸ் தாமதமானது. டாஸ் வென்ற திண்டுக்கல் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


அதன்படி முதலில் விளையாடிய லைக்கா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுஜய் மற்றும் சுரேஷ்குமார் களமிறங்கினர். இதில் சுஜய் 22 ரன்களிலும், சுரேஷ் குமார் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சாய் சுதர்சன் 14, முகிலேஷ் 0 ரன்னுடன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.


அதன்பின் ராம் அரவிந்த், ஆதிக் உர் ரஹ்மாம் ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். ஆனால், ஆதிக் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அரவிந்த் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாருக்கான் 3 ரன்களிலும், முகமது 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் லைக்காவுக்கு எதிராக கிங்ஸ் அணி 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.


திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை பொறுத்த வரை பந்துவீச்சில் சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி, பி.விக்னேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சுபோத் பதி ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் திண்டுக்கல் வெற்றி பெற்றால் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றும்.


Batting first in the final of the TNPL 2024 series against Dindigul Dragons, Laika Kowai Kings scored 129 runs for the loss of 7 wickets in 20 overs.


The final match of the 8th season of the Tamil Nadu Premier League is currently being held at the MA Chidambaram Stadium in Chennai. Dindigul Dragons and Laika Kings are playing in this. The toss was delayed due to rain in Chennai. Dindigul captain Ravichandran Ashwin won the toss and chose to bowl.


Accordingly, Laika Kovai Kings, who played first, lost 7 wickets in 20 overs and scored only 129 runs. Both Sujay and Suresh Kumar were the openers. In this, Sujay was dismissed for 22 runs and Suresh Kumar was dismissed for 11 runs. Sai Sudarsan 14, Mukilesh 0 were bowled out for meager runs.


After that, Ram Arvind and Adiq ur Rahmam combined to play calmly and add runs. However, Adhik was out for 25 runs and Arvind was dismissed for 27 runs. Captain Shah Rukh Khan was dismissed for 3 runs and Mohammad was dismissed for 15 runs. In the end, the Kings scored only 129 runs against Laika.


As far as the Dindigul Dragons team is concerned, Sandeep Warrier, Varun Chakraborty and P Vignesh took 2 wickets each in the bowling. Suboth Pathi took a wicket. Following this, Dindigul Dragons are playing with a target of 130 runs. If Dindigul wins this match, it will win the title of champion for the first time and grab the trophy.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top