ISL Football : ஐ.எஸ்.எல்., கால்பந்து பெங்களூரு 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிராடிராவில் முடிந்தது.
பெங்களூரு: பெங்களூரு மற்றும் ஒடிசா அணிகளுக்கு இடையேயான ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து 10வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடந்து வருகிறது. பெங்களூருவில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு, ஒடிசா அணிகள் மோதின. இரு அணிகளும் கடைசி நிமிடம் வரை போராடியும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டத்தின் முடிவில் ஆட்டம் 0-0 என ‘டிரா’ ஆனது.
ஏற்கனவே ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு இடம் பிடித்துள்ள ஒடிசா அணி, 19 ஆட்டங்களில் 10 வெற்றி, 6 டிரா, 3 தோல்வியுடன் 36 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி 20 போட்டியில் 5 வெற்றி, 7 டிரா, 8 தோல்வி என 22 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. மும்பை (41 புள்ளிகள்), மோகன் பகான் (39) முதல் இரண்டு இடங்களில் நீடிக்கிறது.
ஜாம்ஷெட்பூர் ‘டிரா’
ஜாம்ஷெட்பூரில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் கேரளா, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கேரளா சார்பில் டிமிட்ரியோஸ் டயமண்டகோஸ் (23வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். ஜாம்ஷெட்பூர் அணிக்கு சேவியர் சிவேரியோ (45வது நிமிடம்) பதிலடி கொடுத்தார்.
கேரளா அணி 19 போட்டிகளில் 9 வெற்றி, 3 டிரா, 7 தோல்வி என 30 புள்ளிகளுடன் 5வது இடத்தில் நீடிக்கிறது. ஜாம்ஷெட்பூர் அணி 20 ஆட்டங்களில் 5 வெற்றி, 6 டிரா, 9 தோல்வி என 21 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியது.
ISL, Football : Bengaluru draw 1-1
Bengaluru: The ISL football match between Bengaluru and Odisha ended in a goalless draw.
The 10th season of Indian Super League (ISL) football is happening in major cities of the country. Bengaluru and Odisha teams clashed in a league match in Bengaluru. The two teams fought till the last minute and could not score a single goal.
At the end of the match the match was ‘drawn’ 0-0.
The Odisha team, which has already secured a place for the ‘play-off’ round, has advanced to the 3rd place with 36 points from 19 matches, 10 wins, 6 draws and 3 losses. Bengaluru team is in 6th place with 22 points from 20 matches, 5 wins, 7 draws and 8 losses. Mumbai (41 points) and Mohan Baghan (39) remain in the first two places.
Jamshedpur ‘draw’
In another league match at Jamshedpur, Kerala and Jamshedpur clashed. The fast-paced match ended in a 1-1 draw at the end of the game. Dimitrios Diamantakos (23rd minute) scored a goal for Kerala. Xavier Siverio (45th minute) responded for Jamshedpur.
Kerala team continues at the 5th position with 30 points from 19 matches, 9 wins, 3 draws and 7 losses. Jamshedpur team advanced to 7th place with 21 points from 20 matches, 5 wins, 6 draws and 9 losses.