Butter Face Mask முகத்தை அழகாக்கும் வெண்ணெய் அழகு குறிப்பு..! | Butter Beauty Tips in Tamil

0

தமிழில் பட்டர் பியூட்டி டிப்ஸ் பாருங்கள். வெண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது சருமத்திற்கு மென்மையையும் பளபளப்பையும் தருகிறது. அதுமட்டுமின்றி, சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து ஆரோக்கியமாக வைக்கிறது.

 

 Tips On How To Apply A Facial Mask For Your Skincare, 51%, 55% OFF

எனவே, சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க என்னென்ன பொருட்களை வெண்ணெயுடன் சேர்க்க வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையில் கீழே விவரித்துள்ளோம். படித்து தெரிந்து கொள்வோம்.

இரண்டு ஸ்பூன் பாலுடன் 1/4 ஸ்பூன் வெண்ணெய் கலக்கவும். இதனை முகத்தில் தடவி 15 அல்லது 20 நிமிடம் கழித்து ஈரத்துணியால் துடைக்கவும். அதன் பிறகு, உங்கள் முகத்தை தண்ணீரில் நன்கு கழுவுங்கள். ஆரம்பத்தில் முகம் எண்ணெய் பசையுடன் காணப்படும். ஆனால், சிறிது நேரம் கழித்து முகம் பிரகாசமாகவும் மென்மையாகவும் மாறும். அதேபோல் இரண்டு முறை செய்தால் முகம் பொலிவு பெறும்.

3 ஸ்பூன் தயிருடன் 1/4 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், சருமம் மென்மையாக இருக்கும். அதுமட்டுமின்றி வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தினால், சருமம் விரைவில் மென்மையாக மாறும்.

அவகேடோ அழகு குறிப்பு-3

ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த 3 பாதாம் பருப்புகளைச் சேர்த்து சில துளிகள் பனீர் சேர்த்து அரைக்கவும். 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 1/2 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து முகத்தில் தடவவும். 20 அல்லது 30 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படி மாதம் ஒருமுறை செய்து வந்தால் முகம் மிருதுவாக மாறும்.

அவகேடோ அழகு குறிப்பு-4

மிக்ஸியில் பாதி வாழைப்பழம் மற்றும் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்றாக அரைக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். அதன் பிறகு, ஒரு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் முகம் மிருதுவாகவும், பொலிவாகவும் இருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top