MY V3 Ads திடீர் பரபரப்பு ! MY V3 விளம்பர நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது! கோவை காவல்துறை அதிரடி! காரணம் என்ன ?

0

கோவை: கோவையில் MY V3 Ads விளம்பர நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் உள்பட 70 பேரை கோவை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த மாதம் கோவையில் செயல்பட்டு வரும் MY V3 Ads என்ற ஆன்லைன் நிறுவனம் மீது கோவை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 360 முதல் ரூ.1.20 லட்சம் வரை முதலீடு செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கடந்த மாத இறுதியில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தை விசாரணைக்கு அழைத்தனர். அப்போது அவருக்கும் நிறுவனத்துக்கும் ஆதரவாக கோவை நீலம்பூர் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் திடீரென ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

திரளான மக்கள்: மோசடி புகாரில் சிக்கிய MY V3 Ads நிறுவனத்துக்கு ஆதரவாக மக்கள் திடீரென திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையை முடித்த போலீசார் அவரை அனுப்பி வைத்தனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் முதலீடுகள் வந்துள்ளதாக கூறிய சக்தி ஆனந்த், சிலர் அந்த நிறுவனத்தின் மீது வீண் பழி சுமத்த முயற்சிப்பதாகவும் சாடினார்.

மை வி3 ஆட்ஸ்' செயலி முடக்கம்… பணம் வராமல் தவிக்கும் வாடிக்கையாளர்கள் ;  சக்தி ஆனந்தை சிறையில் அடைக்க உத்தரவு - Update News 360 | Latest Tamil News  Online | Live ...

அதேபோல் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள். தங்களுக்கு வரவேண்டிய தொகை ஒரு நாள் கூட தாமதிக்கவில்லை என்று பலர் சொன்னார்கள்.. ரூ. 6, ரூ. 15. எவ்வளவு தொகையாக இருந்தாலும் சரியான நேரத்தில் பணம் வந்து சேரும் என்றார்கள். இன்னும் சிலர் இதில் பல லட்சம் முதலீடு செய்துள்ளதாகவும், தங்கள் குடும்பத்தினர் அதை நம்புவதாகவும் கூறினர். இது பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்துவதாக இருந்தது.

ஏன்: அதேபோல, அந்த நேரத்தில் எப்படி திடீரென ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர் என்பதும் முதலில் மர்மமாகவே இருந்தது. அதன்பிறகு அந்த நிறுவனம் மீது புகார் எழுந்ததுடன், ஆதரவாக போராட வராவிட்டால் வருமானம் நின்றுவிடும் என்று சிலர் மிரட்டல் செய்தி அனுப்பியதாக செய்திகள் வெளியாகின. அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் பலன் கிடைக்கும் என்பது தெரிய வந்தது மேலும் எந்த இடத்திற்கு வர வேண்டும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து, அனுமதியின்றி சந்தித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது ஒருபுறமிருக்க, இந்த சம்பவத்திற்குப் பிறகு இணையத்தில் பலரும் MY V3 Ads நிறுவனத்தைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கினர். மோசடி நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் பலர் கூறியுள்ளனர். இந்த நிலையில் கோவையில் உள்ள MY V3 Ad நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது: தன் மீதும், தன் நிறுவனம் குறித்தும் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தர்ணா நடத்த முயன்றார். இதையடுத்து சக்தி ஆனந்தை போலீசார் கைது செய்தனர். அவருடன் தர்ணாவில் ஈடுபட முயன்ற 70 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top