விஜய் முதல் அரசியல் அறிக்கை !

0

தமிழ்நாடு வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய் தற்போது அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வந்த நடிகர் விஜய், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் ஆசை கொண்டவர். இதனால் விஜய் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக மகளிர், ஐடி அணி, சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் என மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தினார் விஜய்.

சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை கூட்டங்கள் மற்றும் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் நடந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய் கடந்த 2ம் தேதி கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாடு வெற்றி கழகம் என்று தனது கட்சிக்கு பெயர் சூட்டிய விஜய், அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை என்றும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் கூறிய விஜய், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதே இலக்கு என அறிவித்தார்.

மேலும், தமிழகத்தில் ஒருபுறம் ஊழல், நிர்வாக சீர்கேடு என்ற அரசியல் கலாச்சாரம், மறுபுறம் சாதி, மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் பிளவு கலாச்சாரம் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு திமுக, அதிமுக, பாஜகவை விஜய் விமர்சித்ததாக கூறப்பட்டது.

விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு ஓபிஎஸ், அண்ணாமலை, டிடிவி தினகரன், திருமாவளவன், உதயநிதி ஸ்டாலின் என பல தலைவர்கள், நடிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், விஜய்யின் அரசியல் பிரவேசம் மற்றும் அவரது கட்சி பெயரை பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதிப்புள்ள அரசியல் தலைவர்கள், அன்பான திரையுலக நண்பர்கள், அன்புத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தோழர்களை ஊக்குவிக்கும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் பேரனான எனது அரசியல் பயணத்தை வாழ்த்திய நெஞ்சார்ந்த நன்றி மற்றும் பணிவான வணக்கங்களுடன்.

விரைவில் விஜய் கட்சியின் பொதுச்செயலாளர், பொருளாளர் என அடுத்த கட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும், அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top