அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் ஈரான் ஆதரவு குழுவின் தளபதி பலி ...

0

அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் ஈரான் ஆதரவு குழுவின் தளபதி பலி …  ஈராக் தலைநகரான பாக்தாத்தில் நேற்று அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது ( ட்ரோன் Drone ). ஈரான் ஆதரவு பெற்ற கட்டாய்ப் ஹிஸ்புல்லாவைச் சேர்ந்த 3 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் அமைப்பின் மூத்த தளபதி (விஸ்ஸாம் முஹம்மது அபுபக்கர் அல்-சாதி). பாக்தாத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள மாஷ்டல் என்ற இடத்தில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்த போது,drone மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

ஈரான் ஆதரவு ஆயுதக் குழு ஜோர்டானில் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் ஆதரவு பெற்ற கத்தாயிப் ஹிஸ்புல்லா குழு இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகிக்கின்றது.

இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, சிரியாவில் உள்ள ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை குறிவைத்து வருகிறது. கடந்த வாரத்தில், ஈரான் மற்றும் சிரியாவில் ஆயுதமேந்திய குழுக்களை குறிவைத்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல்களை நடத்தியது. இதனையடுத்து நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா நிலைகளை அமைத்து படைகளை நிலைநிறுத்தியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து ஆயுதக் குழுக்கள் அடிக்கடி அமெரிக்க நிலைகளைத் தாக்கி வருகின்றன.

ஜோர்டான் தாக்குதலுக்குப் பிறகு, ஈராக் அரசாங்கத்தை சங்கடப்படுத்தாமல் இருக்க அமெரிக்க நிலைகள் மீதான தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும். எனினும் ஏனைய இடங்களிலும் தாக்குதல் தொடரும் என கத்தாயிப் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top